Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 04 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கு அருகில் நீண்டகாலமாக மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்த மீன் வியாபாரிகள் அவ்விடத்தில் மீன் விற்பனை செய்வதற்குத் தடை விதித்து அவர்களை அங்கிருந்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த மீன் வியாபாரிகள் அட்டாளைச்சேனை பொதுநூலகத்துக்குச் செல்லும் வழியை மறித்து மீன் விற்பனை செய்து அசௌகரியத்தை ஏற்படுத்திய சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இது தொடர்பில் குறித்த மீனவர்கள் தெரிவிக்கையில், 'மீன் வியாபாரம் செய்வதற்கு எங்களுக்குச் சந்தை இல்லை. ஆகவே, எங்களுக்கு சந்தை ஒன்று அமைத்துத் தரப்படும் பட்சத்தில் அங்கு மீன் விற்பனையை முன்னெடுக்க முடியும்' என்றனர்.
இது தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரிடம் கேட்டபோது, 'அட்டாளைச்சேனை பொதுநூலகத்துக்கு முன்பாக மீன் விற்பனை செய்வதால், நூலகத்துக்கு வருபவர்களும் பயணிகளும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இங்கு மீன் விற்பனை செய்வதால், அதன் கழிவுகள் வடிகான்களிலும் தரையிலும் வீசப்படுகின்றன. இதனால், இப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதுடன், விலங்குகள் மற்றும் பறவைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.
குறித்த மீனவர்களுக்கு பொருத்தமான இடத்தில் சந்தையை அமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பை அட்டாளைச்சேனை பிரதேச சபை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்கு பொறுப்பாகவுள்ள அதன் செயலாளர் எல்.முகம்மட் இர்பானிடம் கேட்டபோது, 'குறித்த மீன் வியாபாரிகளுக்கு பொருத்தமான இடத்தில் சந்தை ஒன்றை அமைத்துக் கொடுக்கும் வேண்டியது அவசியமாகும். மிக விரைவில் இதற்கான தீர்வு எட்டப்படும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago