2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி சாதனை

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட ஆங்கில மொழி மூல விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியைச் சேர்ந்த தரம் 10இல் கல்வி கற்றுவரும் மாணவன் எம்.எம் பர்வேஸ் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இம்மாணவன் 2013ஆம், 2014ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இதே போட்டிகளில் மூன்றாம் இடங்களை பெற்றிருந்ததுடன், கொழும்பு பல்கலைக்கழக பௌதிக விஞ்ஞான பிரிவும் வானியல்  பௌதிக விஞ்ஞான நிறுவனமும் இணைந்து 2013ம் ஆண்டில் நடத்திய வானியல் ஒலிம்பியாட் போட்டியில் மெரிட் சித்தி பெற்றிருந்தமையும், 2012ஆம் ஆண்டில் தேசிய கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் தேசிய மட்டத்தில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவர், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் முகாமைத்துவ உதவியாளர் அ.க.முபாறக் மற்றும் சித்தி முசம்மிலா தம்பதிகளின் புதல்வராவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X