2025 ஜூலை 16, புதன்கிழமை

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு நிதி

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

மத்திய அரசின் 05 கோடி ரூபாய் நிதியுதவியில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையை புனரமைக்கப்படுமென  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் தலைமையில் மத்திய அரசாங்க சுகாதார அமைச்சின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகஸ்;தர்களைக் கொண்ட குழுவினர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையை இன்று ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர்.

இதன்போது, இவ்வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் இக்குழுவினர் கேட்டறிந்துகொண்டனர். இந்நிலையிலேயே, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

வைத்தியசாலையை புனரமைப்பதுடன்,  கட்;டடங்களை கட்டித் தருவது பெரிய விடயமல்ல. அந்தக் கட்டடங்களை  சுத்தமாக பேணவேண்டிய பாரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாகவும் அவர் கூறினார்.
    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .