2025 மே 22, வியாழக்கிழமை

அதிகளவான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கையில் அதிகளவான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற  விழிப்புணர்வுக் கருத்தரங்கின்போதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'பெண்கள் மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு ஆரம்பத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்நோய் பரவாமல் கட்டுப்படுத்த முடியும்.

அரசாங்கத்தினால் நாடு பூராகவும்  சிகிச்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பான பரிசோதனை இடம்பெறுகிறது. 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இச்சிகிச்சை நிலையத்துக்குச்; சென்று தங்களை பரிசோதிக்க முடியும்' என்றார்.

மேலும் அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, தீகவாபி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 35 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் சுகாதார நிலையத்துக்குச் சென்று இதற்கான வைத்திய பரிசோதனையை மேற்கொள்ளுமாறும்  அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X