2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவும்

Niroshini   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச இந்துமா மன்றத்தினால் நவம்பர் மாதம் 07ஆம் திகதி நடத்தப்படவுள்ள சைவசமயப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைக்குழுத் தவைலவரும் இந்துமாமன்ற இணைப்பாளருமான ம.காளிதாசன் தெரிவித்தார்.

இந்த பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் 067-2279679 அல்லது 077-5581841 தொலைபேசி இலக்கத்ததுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தரம் 3 முதல் க.பொ.த.சாதாரண தரம் வரையிலான மாணவர்களிடையே நடத்தப்படும் இப்பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு சான்றிதழும் கௌரவிப்பும் பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இப்பரீட்சையானது வலய கல்வி அதிகாரிகளின் அனுமதியுடன் நடத்தப்படுவதால் வழங்கப்படும் சான்றிதழ்களும் சட்டரீதியானதாகவும் வலுவுள்ளதாகவும் அமையும் என மன்றத்தின் தலைவர் வே.சந்திரசேகரம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X