2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அனுமதியின்றி கால் நடைகளைக் கொண்டு சென்றவருக்குப் பிணை

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சவளக்கடைப் பிரதேசத்துக்கு அனுமதிப்பத்திரமின்றி கால் நடையாக 11 எருமை மாடுகளைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரொருவரை, 01 இலட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், நேற்று வியாழக்கிழமை (07) விடுதலை செய்ததுடன், மே மாதம் 06ஆம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். 

மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேசத்தலிருந்து கடந்த புதன்கிழமை (06) மாலை கால்நடையாக எருமை மாடுகளை கொண்டு சென்ற போது சவளக்கடைப் பொலிஸாரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார். 
 
குறித்த நபரை, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் முன்னிலையில் நேற்று (07) ஆஜர் செய்த போது 01 இலட்சத்தில் 25 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்து, கைப்பற்றப்பட்ட எருமை மாடுகளை 05 இலட்சம் ரூபாய் பிணையில் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X