2025 ஜூலை 05, சனிக்கிழமை

அனர்த்த முகாமைத்துவ துரிதப்படுத்தல் வேலைத்திட்டம்

Niroshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் .எல். அஸீஸ்

கல்முனை பிரதேசத்தில் அனர்த்த முகாமைத்துவ துரிதப்படுத்தல் வேலைத்திட்டம் இன்று(03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக இன்று கல்முனை பிரதேசசெயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இப் பிரதேசம் தொடர்ந்து பெய்து  வரும் மழை காரணமாக அனர்த்தங்கள் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள்,அதனை தீர்க்க மேற்கொள்ளப்படவிருக்கும் உடனடி நடவடிக்கைகள்,எதிர்கால முன்னாயத்த நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டதுடன் அதற்கான விசேட செயலணி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

கல்முனை பிரதேச அனர்த்த முகாமைத்துவ  உத்தியோகத்தர் ஏ.ஆர்.நபாயிஸ்யின் ஒருங்கிணைப்பிலும் பிரதேச செயலாளர் எம்.எச்.முகமட் கனி தலைமையிலும் இடம்பெற்ற இந்த அமர்வில் கல்முனை மாநகர ஆணையாளர்  ஜெ.லியாக்கத்தலி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ  உத்தியோகத்தர் எ.சி.எ.வாகிர்  உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .