Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Thipaan / 2017 ஜனவரி 15 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
நிந்தவூரில் அமைந்துள்ள அனல் மின் நிலையப் பிரச்சினைக்கு விரைவில் உயர் மட்ட மூலமாக தீர்வு கிடைக்குமென சுகாதாரப்பிரதியமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.
நிந்தவூர் அட்டப்பள்ள பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளின் பேரில் சனிக்கிழமை (14) அப்பகுதிக்குச் சென்று மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
'இம்மின் நிலயத்தினூடாக ஏற்படும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்க்கமான முடிவொன்றுக்கு வரவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. இதுவரைகாலமும் இம்மின் நிலையம் சார்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில், சுகாதாரப் பிரதியமைச்சர் என்ற வகையில் தான் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லையெனவும், அதன் மூலம் இம்மக்களின் கோரிக்கைகள் தன்னால் புறந்தள்ளப்பட்டுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆனால், இம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்க உயர் அதிகாரிகளுடனும், இம்மின் நிலைய உரிமையாளருடனும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளேன். எனவே இவ்விடயம் சம்பந்தமாக எதிர்காலத்தில் ஓர் ஆரோக்கியமான முடிவொன்று கிடைக்கவுள்ளது' என்றார்.
அதேபோன்று, இம்மின் நிலையத்தின் மூலமாக ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இப்பகுதி மக்களில் 05 பேர் கொண்ட குழுவினையமைத்து அவர்கள் மூலமாக இதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளுமாறு பிரதியமைச்சர் கோரியதையடுத்து, அதற்காக இப்பகுதி மக்களினால் ஒப்புதல் வழங்கப்பட்டு விரைவில் அரச உயர் அதிகாரிகளை சந்திப்பதற்காக வசதி வாய்ப்புக்களும் பிரதியமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago
02 May 2025