2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அபிவிருத்தி தொடர்பான சந்திப்பு

Niroshini   / 2015 நவம்பர் 12 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பரிவுக்குட்பட்ட பாலமுனை ஹைமா பள்ளிவாசல் நிருவாகத்தினருக்கும் கட்டார் நாட்டில் இயங்கும் அல்-மீஸான் சமூக சேவை அமைப்பின் தலைவர் ஏ.எம்.ஹீதைப் தலைமையிலான குழுவினருக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை  மாலை 4.30மணியளவில் பள்ளிவாசல் பிரதான மண்டபத்தில் பள்ளிவாசல் தலைவர் இஸ்ஸதீன்.ஏ.ஸிறாஜ் தலைமையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் அல்-மீஸான் சமூக சேவை அமைப்பின் பிரதி நிதிகளான எம்.எஸ்.உவைஸ். எம்.ஏ.அஸ்ரப் அலி, பி.எஸ்.மக்கீன் ஜெலீல், பள்ளிவாசல் இமாம் ரீ.எல்.அஸ்ரப், பள்ளிவாசல் உப தலைவர் ஏ.ஆதம்பாவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது, பள்ளிவாசலில் தற்போதய நிலையில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பாக கட்டார் நாட்டின் அல்-மீஸான் அமைப்பின் தலைவர் தலைமையிலான குழுவினருக்கு சுட்டிக்காட்டியதுடன் அபிவிருத்தி மேற்கொள்ள வேண்டிய விடயங்களையும் ஆராய்ந்தனர்.

இக் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட அல்-மீஸான் அமைப்பின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

எமது அமைப்பினால் பிரதேசவாதமின்றி சமூக சேவை அடிப்படையில் கல்வி சமய கலாசார மற்றும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார ரீதியான முன்னேற்றத்துக்கு உதவி வருகின்றோம்.

அந்த வகையில், எமது அமைப்பினால் 2015ஆம் ஆண்டுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு ஒரு சில இடங்களில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே. 2016 ஆம் ஆண்டுக்கான அல்-மீஸான் அமைப்பினால் மேற்கொள்ள இருக்கும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் போது பாலமுனை பிரதேசத்திலுள்ள இந்த பள்ளிவாசல் மற்றும் கல்வி அபிவிருத்திக்கு என்னால் முடியுமான அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார்.

இதேவேளை,பள்ளிவாசலில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி தொடர்பாக பள்ளி நிருவாகத்தினரால் அல்-மீஸான் அமைப்பின் குழுவினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.                  


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .