2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அமைச்சர் ஆரியவதி அம்பாறைக்கு விஜயம்

Niroshini   / 2015 நவம்பர் 12 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் டபிள்யூ.ஜீ.எம். ஆரியவதி கலபதி  வெள்ளிக்கிழமை(20) அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளாதாக தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். இராஜேஸ்வரன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதற்கிணங்க, வெள்ளிக்கிழமை(20) காலை 09 மணிக்கு கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குறித்த அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பொது நல அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து இப்பிரதேசங்களின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் முற்பகல் 11 மணிக்கு ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள திணைக்களத் தலைவர்;கள் மற்றும் பொது நல அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து குறித்த அமைச்சின் மூலமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது, 100 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.

பிற்பகல் 02.30 மணிக்கு பொத்துவில் பிரதேசத்துக்;கு விஜயம் செய்யும் கிழக்கு மாகாண அமைச்சர் டபிள்யூ.ஜீ.எம். ஆரியவதி கலபதி,பொத்துவில், ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் பொது மக்களையும் அரச திணைக்களத் தலைவர்களையும் சந்தித்து இப்பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் இன்றி வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளார் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X