2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அமைச்சர் நஸீரின் தலையீட்டால் வீதி அமைக்கும் பிரச்சினைக்கு தீர்வு

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கொங்றீட் வீதி அமைப்பது தொடர்பில் அட்டாளைச்சேனை 5ஆம் பிரிவில் வசிக்கும் குடும்பங்களிடேயே ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலையீட்டினால் உடனடி தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

சுமார் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனை 5ஆம் பிரிவிலுள்ள வாய்க்கால்கட்டு வீதியை அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது, குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும் குடும்பங்களிடத்தில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் குறித்த இடத்துக்கு உடனடி விஜயத்தை மேற்கொண்டு அம்மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தார்.

அப்பிரச்சினையை உடனடியாக தீர்க்கும் வகையில், அமைச்சர் நஸீர் அது தொடர்பான அதிகாரிகளுக்கு அலைபேசி மூலம் அழைப்பு விடுத்தமைக்கு அமைவாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.அஸ்லம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.எம்.ஹாறூன் ஆகியோர் குறிப்பிட்ட இடத்துக்கு வருகை தந்து அம்மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் அப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

அத்துடன் அவ்வீதிக்கு இப்றாகீம் ஹாஜியார் வீதி என்ற பெயரை சூட்டுமாறும் அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இம்மக்கள் மழை காலங்களில் வெள்ள நீரினால் பாதிப்படைந்து வருகின்றமையை கவனத்திற்கொண்டு,கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் 10 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீட்டின் கீழ் வடிகான் திட்டத்துடன் இவ்வீதி கொங்றீட் வீதியாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .