Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 14 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அம்பாறை, ஒலுவில் துறைமுகப் பிரதேசத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீமை விழித்து வாசகம்; எழுதப்பட்ட சுவரொட்டிகள் கடந்த சில தினங்களாக ஒட்டப்பட்டுள்ளன.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'அமைச்சர் ஹக்கீமே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2016ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டுக்கு முன் ஒலுவில் துறைமுகக் காணிச் சுவீகரிப்புக்கான நட்டஈட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடு. இங்ஙனம் காணிகளை இழந்த ஒலுவில் மக்கள்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய பேராளர் மாநாடு, எதிர்வரும் 19ஆம் திகதி ஒலுவில் துறைமுகத்துக்குச் சமீபமாகவுள்ள பாலமுனைப் பிரதேசத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிக்காக ஒலுவில் கரையோரக் கிராமத்தைச் சேர்ந்த 48 குடியிருப்பாளர்களின் 63 ஏக்கர் காணித்துண்டுகள் 2008ஆம் ஆண்டு அரசினால் சுவீகரிக்கப்பட்டது. அதன் பின்னர் காணிகளை இழந்த 48 பேரில் 32 பேருக்கு காணி இழப்புக்கான மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களில் 20 பேருக்கே நட்டஈடு வழங்கப்பட்டது.
இவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டவர்களில் மேலும் 12 பேருக்கும் மதிப்பீடு செய்யப்படாத 16 பேருக்குமாக மொத்தம் 28 பேருக்கு இதுவரையில் நட்டஈடு வழங்கப்படவில்லையென ஒலுவில் துறைமுகத் திட்டத்தினால் காணி இழக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.பழிலுல்லா தெரிவித்தார்.
'இந்தக் காணி சுவீகரிப்பின்போது காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு, தொழில் இழப்புக்கு கொடுப்பனவு, கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு, வீட்டு வளவுகளில் பன்புல் வளர்த்து தமது வாழ்வாதாரத்தைத் தேடியோருக்கு பன்புல் வளர்;க்க உதவுவோம் என்றெல்லாம் கூறப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் இந்தத் துறைமுகத் திட்டம் இங்கு கொண்டுவரப்பட்டதால் தமது வசிப்பிடம், காணி, தொழில், வாழ்க்கையென அனைத்தும் பறிபோனது. அத்துடன், தற்போது ஏற்பட்டுள்ள கடல் அரிப்பால் நாளுக்குநாள் எமது கிராமமும் அழியும் நிலைமை உருவாகியுள்ளது.
தற்போதைய நல்லாட்சியில் தமது இழப்புக்களுக்கு ஒரு முடிவு வேண்டும்' என பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago