2025 மே 21, புதன்கிழமை

அம்பாறைக்கு மேலும் 4 நெற்களஞ்சியசாலைகள்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 31 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்டத்தில் அடுத்த வருடம் மேலும் நான்கு நெற்களஞ்சியசாலைகள் அமைக்கப்படுமென ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயாகமகே, இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

நெற்கொள்வனவின் தற்போதைய நிலைமை தொடர்பில் அறிவதற்காக உகனப் பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (29) அமைச்சர்  களப்பரிசீலனை மேற்கொண்டார்.

அதிக நெல் உற்பத்தி செய்யப்படும் அம்பாறை மாவட்டத்தில் அறுவடைக் காலத்தின்போது, விவசாயிகள் தங்களின் நெல்லை விற்பனை செய்வதில் எதிர்கொள்ளும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாகவே புதிய களஞ்சியசாலைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லுக்கான பணம் தற்போது வங்கிகளினூடாக வழங்குவதற்கான நடவடிக்கையை  அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு பிரதேசத்திலும் சமகாலத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X