Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூன் 11 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அஷ்ரப்கான்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் போரத்தின் இப்தார் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு சாய்ந்மருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக போரத்தின் செயலாளர் எம்.சஹாப்தீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் போரத்தின் தலைவர் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரச திணைக்களத் தலைவர்கள், உலமாக்கள், கல்விமான்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது போரத்தின் உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் மற்றும் உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய ஊடக கைநூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
மேலும் இவ் இப்தார் நிகழ்வில் விசேட பயான் துஆப் பிரார்த்தனை மற்றும் இராப்போசனம் என்பன இடம்பெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .