2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு

Princiya Dixci   / 2016 மே 05 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் போரத்தின் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு, சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) காலை 8.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை நடைபெறவுள்ளதாக போரத்தின் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்தார்.

போரத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொத்துவில் - அக்கரைப்பற்று சட்ட உதவி ஆணைக்குழுவின் அனுசரணையில் ஊடகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனைகள், புலனாய்வு அறிக்கை மற்றும் ஊடக ஒழுக்கக் கோவை போன்ற விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் போரத்தின் சகல ஊடகவியலாளர்களும் கலந்து பயன்பெறுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு பிரதிப் பணிப்பாளர் அமீர் ஹுஸைன் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X