Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களின் வயது அதிகரித்துச் செல்வதாகவும் இதனால், அவர்களின் நியமனம் தொடர்பில் கருணையுடன் அவசர நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டை செவ்வாய்க்கிழமை (05) சந்தித்த மேற்படி சங்கத்தின் தலைவர் ஐ.எம்.பௌசர் தலைமையிலான குழுவினர், இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
மேற்படி தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நோக்கில் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு ஆறு வருடங்கள் கடந்துள்ளன. இருப்பினும், இவர்களுக்கு நியமனம் கிடைக்காமையால் அவர்கள் விரக்தியடைந்துள்ளதுடன், இவர்களில் பலர் 45 வயதை எட்டும் தறுவாயிலும் உள்ளனர். இவர்களுக்கான நியமனம் தொடர்பில் மேலும் காலம் இழுத்தடிக்கப்படுமாயின், அவர்கள் நியமனம் பெறும் வாய்ப்பை இழந்து விடுவார்களெனவும் முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டியதாக சங்கத் தலைவர் ஐ.எம்.பௌசர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் 109 தொண்டர் ஆசிரியர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
7 hours ago