Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச முன்பள்ளிப் பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் வியாழக்கிழமை (28) பிற்பகல் 2.30 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மொத்தமாக 1,000 ஆசிரியர்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 889 பேருக்கு இந்தக் கொடுப்பனவு வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளது. ஏனையோருக்கு அடுத்த வாரம் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும்.
மாதமொன்றுக்கு 3,000 ரூபாய் படி இந்த வருடத்தில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கான கொடுப்பனவே வழங்கப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலைகள் பணியகத்தின் செயலாற்றுப் பணிப்பாளர் கே.எம்.சுபைர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண பாலர் பாடசாலைகள் பணியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
53 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago
6 hours ago