2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அம்பாறையில் அறுவடை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 21 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை 149,500 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நெற்செய்கைக்கான அறுவடை இந்த வாரம் ஆரம்பமாகியுள்ளதாக மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

நாட்டின் தேசிய நெல் உற்பத்தியில் 20 சதவீதமான பங்களிப்பு கிடைக்கும் அம்பாறை மாவட்டத்திலிருந்து இப்பெரும்போகத்திலும் சிறந்த அறுவடையை பெறமுடியுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை பெய்த பருவமழை காரணமாக ஆரம்ப நெல்  விதைப்பு வேலை பாதிக்கப்பட்டதுடன், நோயின் தாக்கமும் அதிகரித்துக் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பெரும்போகச் செய்கை ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி மாத நடுப்பகுதியில் அறுவடை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X