2025 மே 22, வியாழக்கிழமை

அம்பாறையில் இரு கைத்தொழிற்பேட்டைகள்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பாரிய கைத்தொழில்; பேட்டைகளை அமைப்பதற்கான முன்னெடுப்புகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளர் எம்.என்.எம்.நபீல் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையிலும் அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி தேசிய வருமானத்துக்கு பங்களிப்புச் செய்யும் வகையிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், முதலில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலையில் சுமார் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கைத்தொழில் பேட்டை அமைக்கப்படவுள்ளது. அவ்வாறே  மகா ஓயா பிரதேசத்திலும் கைத்தொழில் பேட்டை அமைக்கப்படவுள்ளது' என்றார்.

'மேலும், அம்பாறை மாவட்டத்தில் கரும்புச் செய்கை நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்ட நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தீர்வு வழங்கப்படும். இதேவேளை, கரும்புச் செய்கையில் ஈடுபடும்; விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வைப் பெற்றுக்கொடுத்து சிறந்த இலாபம் ஈட்டும் ஒரு துறையாக மாற்றியமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X