2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் தொழிற்சந்தை

Niroshini   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

தொழில் அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம், சர்வதேச தொழிற் சங்கம் மற்றும் அம்பாறை மாவட்ட செயலகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள தொழிற்சந்தை எதிர்வரும் 18ஆம்,19ஆம் திகதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

உள்நாட்டு வேலை வாய்ப்புகளில் இணைத்தல், தொழிற் பயிற்சி நிறுவனங்களில் தொழிற்பயிற்சி நெறிகளை பயில்வதற்கு ஏற்பாடு செய்தல் மற்றும் தொழில் வழிகாட்டல் உட்பட 20ற்கும் மேற்பட்ட சேவைகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களினால் தொழில் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.

இதில் தொழில்வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .