2025 ஜூலை 05, சனிக்கிழமை

அம்பாறையில் மீண்டும் மழை;நாவிதன்வெளியில் வெள்ளம்

Niroshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்துவரும் அடைமழையினால் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக,சவளக்கடை மத்தியமுகாம் வீதியின் 6ஆம் கொளனி பிரதேச பிரதான வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் பிரயாணிகள் பல்வேறு சிரமங்களை  எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை, மழை தொடர்ந்து பெய்துவருவதால்  சவளக்கடை விவசாய கேந்திர நிலையத்தின் கீழ் விதைப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகவிருந்த 4 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் வெளிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சவளக்கடை பிரதேச விவசாய போதனாசிரியர் எஸ்.சசிகரன் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் இன்று காலை முதல் தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .