Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 08 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
எதிர்வரும் 2020 ஆண்டளவில் 27,000 நிரந்தர வீடுகளை அம்பாறை மாவட்டத்தில் அமைத்து அனைவரும் சொந்த வீடுகளில் வசிக்கும் நிலைமையை உருவாக்கப்படும் என ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
இதன் பிரகாரம் ஏற்கெனவே 5,000 நிரந்தர வீடுகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அம்பாறை, தயாபுரக் கிராமத்தில் 'கம் உதாவ' வேலைத்திட்டத்தின் கீழ் ஐந்தாவது வீடமைப்புத் தொகுதி திறப்பு விழா, அமைச்சர்; தயா கமகேயின் தலைமையில் சனிக்கிழமை (07) நடைபெற்றது.
25 வீடுகளைக் கொண்ட இந்த வீடமைப்புத் தொகுதியை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ திறந்துவைத்து, உறுதிப்பத்திரங்களையும் பயனாளிகளிடம் கையளித்தார்.
கடந்த காலத்தில் பயங்கரவாதம், வறுமை, குறைந்த வருமானம் காரணமாக மாவட்டத்தில் அதிகளவானவர்கள் வீட்டின் நிரந்தர உரிமை பெற முடியாமல் இருந்ததாகவும் அவர் கூறினார்.
தயாபுரக் கிராமத்தில் குடிநீர், மின்சாரம், வீதிகள் மற்றும் சரியான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
31 minute ago
32 minute ago
37 minute ago