2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

அயடீன் குறைபாடு தொடர்பான ஆய்வு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 28 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் 30 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களிடம் அயடீன் குறைபாடு தொடர்பான ஆய்வு ஜூலை மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்முனை மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம் தெரிவித்தார்.

அம்பாறையில் 16 பாடசாலைகளும்  மட்டக்களப்பில் 08 பாடசாலைகளும்  திருகோணமலையில் 06 பாடசாலைகளும் இந்த ஆய்வுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கான செயலமர்வு, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்றது. இதில் 30 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் 30 மேற்பார்வை பொதுச் பரிசோதகர்களும் 04 மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் கலந்துகொண்டனர்.

ஆய்வுக்காக தெரிவுசெய்யப்படும் மாணவர்களின் உயரம், நிறை, சிறுநீர் மாதிரி, வீட்டில் பயன்படுத்தும் உப்பின் அளவு, அயலில் உள்ள கிணற்று நீர் என்பவை தொடர்பில் ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அயடீன் குறைந்து காணப்பட்டாலும், கூடிக் காணப்பட்டாலும் மந்த புத்தியுள்ள பிள்ளைகள் பிறக்கக்கூடிய நிலைமை காணப்படுவதுடன், இதைத்; தடுப்பதற்காகவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சுகாதார அமைச்சின் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தால் இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களின் அயடீன் குறைபாடு தொடர்பாக கண்டறியும் வேலைத்திட்டம் தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது

சுகாதார அமைச்சால் 05 வருடங்களுக்கு ஒரு தடவை இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கமைய 2016ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X