Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 14 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய சிறுவர் நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு, சமூகசேவைகள் மற்றும் கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் உள்ளிட்ட அரச உயர்மட்ட குழுவினர் இன்று மாலை ஜப்பான் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
05 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் இக்குழுவில் இலங்கை அரச உயர்மட்ட தூதுக் குழுவில் மத்திய அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட பல அரச உயரதிகாரிகளும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விஜயத்தின் போது, ஜப்பான் நாட்டு பிரதமர் சின்சோ அபியுடன் நாளை (15) மாலை முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பில் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரினால் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பின்தங்கிய பிரதேசத்திலுள்ள சுகாதாரத்துறையை முன்னெற்றுவது தொடர்பாக மிக விரிவான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.
மேலும், அங்கு இடம்பெறுகின்ற சுகாதாரத்துறை தொடர்பான பல கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு கிழக்கு மாகாணத்தின் சுகாதார, சுதேச வைத்தியத்துறை தொடர்பாக உரையாற்றவுள்ளதாக அமைச்சர் நஸீர் தெரிவித்தார்.
52 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
7 hours ago