Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஜனவரி 27 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே. றஹ்மத்துல்லா
அரசாங்க கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கையில் தற்போதைய அரசாங்கம் கையாண்டு வரும் முறையற்ற, உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆப்தீன் தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர், இன்று புதன்கிழமை (27) விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கண்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடளாவிய ரீதியில் அரசாங்கம் அரச கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வந்த மோட்டார் சைக்கிள்கள் அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அரச கள உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் இன்னும் வழங்கப்படவில்லை.
இது சம்மந்தமாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் பல காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என பல அரசியல் மட்டங்களில் தொடர்புகொண்டு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
மேலும், இது தொடர்பாக அரசாங்க நிறுவன மட்டத்தில் பல்வேறு மனுக்கள் சமர்ப்பித்தும் கலந்துரையாடல்கள் மேற்கொண்டும் திருப்திகரமான பதில்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.
இதனால், அதிருப்தியடைந்த எமது சங்கமானது கல்முனைப் பிராந்திய மனித உரிமைகள் ஆணையாளரிடம் இதுபற்றி முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், அண்மையில் தேசிய வரவு - செலவுத்திட்ட பணிப்பாளர் நாயகத்தினால் மோட்டார் சைக்கிள்கள் வழங்குவது தொடர்பாக இரண்டு முன்னுக்குப் பின் முரண்பட்ட சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டமையால் மேலும், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அதிருப்தியும் விசனமும் அடைந்துள்ளனர்.
கடந்த 2015.11.05ஆம் திகதி சுற்றுநிருபத்தின் அடிப்படையில் வரவு -செலவுத்திட்ட திணைக்களத்தால் மோட்டார்சைக்கிள்களுக்கு 2015.01.01ஆம் திகதிக்குப் பின்னர் பணம் செலுத்தியவர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படாது என்றும், இப்பணத்தினை மீளப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டது.
இதனால், அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர்கள் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்தனர். ஏனெனில், கடந்த 2014.12.31க்கு முன்னர் மோட்டார் சைக்கிள்களுக்குரிய 50,000 ரூபாய் பணம் செலுத்துவது தொடர்பான உரிய உத்தியோகபூர்வ அறிவித்தல் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நீல் த அல்விஸினால் வழங்கப்படவில்லை. அதனால் ஏராளமான கள உத்தியோகத்தர்கள் முற்பணம் செலுத்தவில்லை.
இது இவ்வாறிருக்கையில், மீண்டும் கடந்த 2016.01.01ஆம் திகதி சுற்றுநிருபத்தின் அடிப்படையில் வரவு - செலவுத்திட்ட தினைக்களத்தினால் 2015.01.01ஆம் திகதி தொடக்கம் 2015.11.20ஆம் திகதி வரை பணம் செலுத்தியவர்களுக்கு மோட்டார ;சைக்கிள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்று நிருபத்திலும் அநியாயம் இடம்பெற்றுள்ளது. ஏனெனில், ஒரு சுற்று நிருபத்தின் மூலம் ஒரு சேவையை அல்லது நடவடிக்கையை ஒரு தினத்தில் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானால், அந்த முடிவுக்கு கொண்டு வரும் தினத்துக்கு முன்னர் அதுபற்றிய பகிரங்க அறிவிப்பை வெளியிட்டிருத்தல் வேண்டும். ஆனால், அவ்வாறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது, ஒரு விடயத்தை முடிவுக்கு கொண்டு வருதல் என்பது அரச நிர்வாக செயன்முறைக்கு முற்றிலும் முரணான காரியமாகும்.
இது தொடர்பாக எமது சங்கமானது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரூடாகவும் தொழிற்சங்கம் சார்பிலும், வரவு - செலவுத்திட்ட தினைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு இச்சுற்றறிக்கை எமது மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது என வன்மையாகச் சுட்டிகாட்டி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மேலும், இந்நடவடிக்கையானது நல்லாட்சி அரசாங்கம் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
அடுத்து, சங்கமானது இவ்வாறான நிர்வாக ரீதியிலான முறைகேடுகள் மற்றும் பாரபட்சம் தொடர்;பாக தற்போது நிறுவப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடம் முறையிடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மேலும், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு ஒன்றினை விரைவாக தொடுப்பது தொடர்பாகவும் சங்கமானது அதன் சட்ட ஆலோசகர்களின் ஆலோசனையைப் பெறும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
36 minute ago
1 hours ago