Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மே 10 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
“ஓர் ஊரின் முன்னேற்றத்துக்கு முதுகெலும்பாக இருக்கின்ற அரச சேவை நிர்வாகிகள் பாராட்டி கௌரவிக்கப்பட வேண்டியது அவசியமாகும்” என அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
சாய்ந்தமருது செஸ்ரோ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'மருதின் விழுதுகள்' கௌரவிப்பு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை(08) இரவு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் அமைப்பின் தலைவரும் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தருமான எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது,
“சாய்ந்தமருது பிரதேசத்துக்கு இன்று பலவகையிலும் அநீதிகள் இழைக்கப்பட்டு வருகின்றன. அரசியல் தலைமைகளினால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றன. அற்ப சலுகைகளுக்காக ஊரைக் காட்டிக் கொடுக்கின்ற செயற்பாடுகள் நிறையவே இடம்பெற்று வருகின்றன.
இந்த அபாயகரமான சூழ்நிலையில் இருந்து எமது ஊரையும் மக்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஊரின் அரசியல் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்க முன்வர வேண்டும். அதற்கு இப்பிரதேசத்தின் கல்வியியலாளர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக வேண்டும்.
தாமும் தம் தொழிலும் என்று இருந்து விடக்கூடாது. ஊரின் முன்னேற்றத்தில் பிரதேச செயலாளர் எவ்வாறு மிகவும் கரிசனையுடன் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றுகின்ராறோ அவ்வாறு அனைத்து அரச சேவை அதிகாரிகளும் பணியாற்ற முன்வர வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
18 minute ago
28 minute ago