2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அலைபேசி திருடிய பெண்ணுக்கு சரீரப்பிணை

Gavitha   / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சவளக்கடை பிரதேசத்தில் அலைபேசியை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரை 25 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்வதற்கு, கல்முனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவானும், மேலதிக நீதவானுமாகிய ஏ. ராமக்கமலன் வெள்ளிக்கிழமை (02) உத்தரவிட்டார்.

கடந்த ஜுலை மாதம் 12ஆம் திகதி சவளக்கடை பிரதேச ஹொட்டல் உரிமையாளரின் அலைபேசி காணாமல் போனதாக சவளக்கடை பொலிஸில் அலைபேசி உரிமையாளர் செய்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் குறித்த அலைபேசி கம்பனி ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலின் அடிப்படையில் மருதமுனை அக்பர் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணை நேற்று வெள்ளிக்கிழமை (02) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும் குறித்த அலைபேசி தனது கணவர் தந்துள்ளதாகவும், தற்போது கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவரது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரான பெண்ணை கல்முனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவானும், மேலதிக நீதவானுமாகிய ஏ. ராமக்கமலன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (02) ஆஜர்செய்த போது, அவரை 25 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இவ் வழக்கு விசாரணை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X