2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அல்மனார் மத்திய கல்லூரி மாணவன் கௌரவிப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் 186 புள்ளிகளை பெற்று 2ஆம் இடத்தைப் பெற்ற மாணவன் எம்.ஆர்.முஹம்மட் மரீஸ் மருதமுனை மக்கள் வங்கிக் கிளையால் பாராட்டி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு நேற்று புதனடகிழமை அல்மனார் மத்திய கல்லூரி ஆரம்பப்பிரிவில் அதிபர் எம்.எம்.ஹிர்பஹான் தலைமையில் நடைபெற்றது.

இதில், மக்கள் வங்கியின் அம்பாறை பிராந்திய பிரதி முகாமையாளர் ஏ.சம்சுதீன் பிரதம அதிதியாகவும் மருதமுனை மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் என்.அருள்செல்வன்,வங்கி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.றப்ஸன் ஜானி,ஆரம்பப் பிரிவுப் பொறுப்பதிபர் முகைதீன் முஸம்மில், உதவி அதிபர் எம்.எம்.எம்.நியாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இதன்போது, மருதமுனை மக்கள் வங்கிக் கிளையினால் மாணவன் எம்.ஆர்.முஹம்மட் மரீஸூக்கு ரூபாய் பதினைந்தாயிரம் பணப் பரிசும் புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X