2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அலுவலக இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா  

சாய்ந்தமருதிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தை அம்பாறை நகருக்கு இடமாற்றுவதை இரத்துச் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு, சாய்ந்தமருது கடற்கரை வீதியிலுள்ள இளைஞர் பயிற்சி நிலையத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

ஒரு சிலரின் தனிப்பட்ட நலன்களைக் கருத்திற்கொண்டு அம்பாறை நகருக்கு குறித்த அலுவலகத்தை இடம் மாற்றுவதற்கு நிறுவனத்தின் உயரதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் சில தினங்களில் இந் அலுவலகத்தை  இடம் மாற்றுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள இளைஞர், யுவதிகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு திறந்துவைக்கப்பட்ட இந்த அலுவலகத்தின் மூலமாக பல்வேறு சேவைகள் ஆற்றப்படுகின்றன.

அம்பாறை நகருக்கு இந்த அலுவலகத்தை இடம் மாற்றுவதற்கு இளைஞர் சேவைகள் மன்றத் தலைவரினால் கடித மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X