2025 மே 22, வியாழக்கிழமை

ஆசிரியர்களை நியமிக்க மாகாண சபையில் தீர்மானம்

Niroshini   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எப்.முபாரக், எம்.எஸ்.எம்.ஹனீபா,பைஷல் இஸ்மாயில்  

கிழக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் சிங்களப் பாடம் கற்பிப்பதற்கு தேர்ச்சி பெற்ற 472 ஆசிரியர்களையும் சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழிப் பாடம் கற்பிப்பதற்கு 78ஆசிரியர்களையும் நியமிக்க கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை புதன்கிழமை (24) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் இரண்டாவது மொழியான சிங்களப் பாடத்தை மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கான சிங்கள நூல்கள் வருடா வருடம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், சிங்களப் பாடத்தை கற்பிப்பதற்கான ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருந்து வருகின்றது.
 
எனவே, இதுதொடர்பில் நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபையில; செவ்வாய்க்கிழமை (23) தனிநபர் பிரேரணை சமர்ப்பித்தேன்.

அதற்கமைய, இப்பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு கிழக்கு மாகாண சபை தீர்;மானம் எடுத்துள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X