Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா,எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கையை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று (14) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'இறக்காமம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக அப்பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் அதனை உடன் நிவர்த்தி செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கமைய இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இறக்காமம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த வருடம் கல்விக் கல்லூரிகளில் இருந்து பயிற்சிகளை நிறைவு செய்து ஆசிரியர் நியமனங்கள் பெறவுள்ள இறக்காம பிரதேச ஆசிரியர்களை கிழக்கு மாகாண சபைக்கு வழங்கி இறக்காமப் பிரதேச பாடசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது.
அம்பாறை மாவட்ட இறக்காமப் பிரதேசப் பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை அவசரமாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி கிழக்கு மாகாண சபையில் தன்னால் தனிநபர் பிரேரனையும் கொண்டுவரப்பட்டிருந்தது. இப்பிரேரனைக்கமைய மத்திய கல்வி அமைச்சரும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும் இறக்காம பிரதேசப் பாடசாலைகளில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபையில் ஏகமானதாக தீர்மானம்;; எடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையில் ஏகமானதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரதி, இறக்காமம் பிரதேச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக இறக்காமம் பிரதேச பள்ளிவாசல் சம்மேளனத்தின் கோரிக்கையின் பிரதியினையும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட கல்வி அமைச்சர் இந்த வருடம் கல்வி கல்லூரிகளிலிருந்து பயிற்சிகளை நிறைவுசெய்து ஆசிரிய நியமனங்கள் பெறவுள்ள இறக்காமம் பிரதேச ஆசிரியர்களை கிழக்கு மாகாண சபைக்கு வழங்கி இறக்காம பிரதேச பாடசாலைகளுக்கு நியமிக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வியியல் தொடர்பான ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025