2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும்

Suganthini Ratnam   / 2016 மே 18 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட இறக்காமம் கல்விக் கோட்டத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரும் தனி நபர் பிரேரணையை எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, இன்று புதன்கிழமை தெரிவித்தார்.                 

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், 'இறக்காமம் கல்விக் கோட்டத்தில் 12 பாடசாலைகள் உள்ளன. இக்கோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிலவுகின்றன. இதனால், இங்கு கல்வி அபிவிருத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்' என்றார்.

'இங்கு நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த வருடம் கல்விக் கல்லூரிகளிலிருந்து வெளியேறவுள்ள இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை இறக்காமம் கோட்டப் பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தற்போது வெளியூர் பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை இறக்காமம் கோட்டப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்' என்றார்.

'இந்த கல்விக் கோட்டப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசாங்கக் கல்வி அமைச்சரிடம் கிழக்கு மாகாண சபை கோர வேண்டும். அத்துடன், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு இறக்காமம் கோட்டப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி தனி நபர் பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளேன்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X