Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் கீழுள்ள ஆரம்பமட்ட பகுதி தேர்ச்சிபெற்ற சேவையைச் சேர்ந்த ஊழியர்கள் பதவிகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்றவர்களிடமிருந்து மருந்தக கலவையாளர், மேற்பார்வையாளர் மற்றும் பரிசோதகர் போன்ற பதவி உயர்வுக்கான பதவிகளுக்கு தகமையுடைய ஊழியர்களிடமிருந்து இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பப் படிவங்கள் யாவும் தாங்கள் கடமையாற்றுகின்ற வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி ஊடாக பூர்த்தி செய்யப்பட்டு, குறிப்பிட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் சிபாரிசுடன் மேற்படி விண்ணப்பப் படிவங்கள், எதிர்வரும் 2016.02.20ஆம் திகதிக்கு முதல் மாகாண ஆணையாளர், சுதேச மருத்துவத் திணைக்களம், கிழக்கு மாகாணம், திருகோணமலை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
34 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
5 hours ago