2025 மே 21, புதன்கிழமை

ஆடைத்தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

Kogilavani   / 2016 மார்ச் 02 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறையில் 4 கோடி ரூபாய் செலவில் நிர்;மாணிக்கப்படவுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நாளை (03) வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் புதன்கிழமை(2) தெரிவித்தர்.

இவ் ஆடைத்தொழிற்சாலையானது, சம்மாந்துறை வங்களாவடி நெற்களஞ்சியசாலைக்கு அருகில்  நிர்மாணிக்கப்படவுள்ளது. இவ் ஆடைத்தொழிற்சாலை நிர்மாணிக்கப்படும்பட்சத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகள் பெறும் நன்மையடைவார்;களென அவர் மேலும் கூறினார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் சம்மாந்துறையில் ஆடைத்தொழிற்சாலை அமைப்பதற்கான தீர்;மானத்தை மாகாண அமைச்சரவை வாரியத்தில் முன்வைத்ததற்கமைய, இவ் ஆடைத் தொழிற்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சுர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகரங்கள் அபிவிருத்தி, நீர்வளங்கள், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண  முதலமைச்சர் ஹபீஸ் நசீர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .