2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆதன வரி அறவீடு ஆரம்பம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 மே 17 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் ஆதன வரி அறவீடு செய்யும் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, இன்று (17) தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டுக்கான ஆதன வரியை, மாநகர சபை உத்தியோகத்தர்கள், வீடு வீடாகச் சென்று அறவீடு செய்வதாகவும், இவ்வேலைத்திட்டம், ஒரு மாத காலத்துக்குத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்களது ஆதன வரியை, உரிய உத்தியோகத்தரிடம் செலுத்தி, அதற்கான பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X