Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனப் பிரிவில் ஒன்பது வான்கதவுகளைக் கொண்ட ஆனைவிழுந்தான் நீர்ப்பாசன அணைக்கட்டு புனரமைப்பின் மூலம் ஆனைவிழுந்தான், புதிய பாவங்காய் ஆகிய பிரதேசங்களில் இருபோகங்களிலும் சுமார் 650 ஏக்கரில் நெற்செய்கை பண்ண முடியும். இதன் மூலம் 200 விவசாயக் குடும்பங்கள் நன்மை அடையுமென அப்பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளர் ரீ.மயூரன் தெரிவித்தார்.
20 மில்லியன் ரூபாய் செலவில் இந்த அணைக்கட்டுக்கான புனரமைப்பு வேலை ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு வெள்ளத்தில் பகுதியளவில் சேதமடைந்த ஆனைவிழுந்தான் அணைக்கட்டு, 2010ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றாகச் சேதமடைந்தது. இதனால் ஆனைவிழுந்தான், புதிய பாவங்காய் ஆகிய பிரதேசங்களிலுள்ள நெல் வயல்கள் நீரப்பாசனமின்றி பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
8 hours ago
30 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
30 Sep 2025