2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவோம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 25 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே. றஹ்மத்துல்லா
 
தேகாரோக்கியமுள்ள ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமே ஆரோக்கியமான எதிர்காலத்தை அடைய முடியும். இதற்காக விளையாட்டு மற்றும் சரீர ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியமாகுமென அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தெரிவித்தார்.
 
விளையாட்டு மற்றும் சரீர ஆரோக்கிய மேம்படுத்தல் தேசிய வாரத்தை முன்னிட்டு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (25) நடைபெற்ற உடற் பயிற்சி ஆரம்ப நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறினார். 
 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய இம்மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நாடு முழுவதும் அனைத்து அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் இவ்வெலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 
மனித உழைப்பில் அதிகமான பணம் சுகாதாரத்துக்காக இன்று செலவீடு செய்யப்படுகின்ற அதேவேளை, அரசாங்கமும் நாட்டின் சுகாதாரத்துறையை விருத்தி செய்து அதிக பணத்தினை செலவு செய்கின்றது.
 
வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் மனிதன் முழு நேரத்தையும் அதற்காகவே செலவு செய்து வருகின்றான். மட்டுமல்லாது தமது பிள்ளைகளையும் எந்தவிதமான விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பங்கு கொள்ளச்செய்யாது ஏட்டுக் கல்விக்காகவே ஈடுபாடு கொள்ளச் செய்கின்ற நிலைமை ஆபத்தானதாக மாறிவருகின்றது.

இன்று, தொற்றா நோய்களே எம்மில் பலரை ஆட்படுத்திக் கொள்கின்றன. இதனாலேயே அதிகமான மரணங்களும் இடம்பெறுகின்றன. இதற்கு போதிய உடற்பயிற்சியின்மை, உணவுப் பழக்க வழக்கம் என்பனவே ஆகும்.
 
எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய தினம் எனவும் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் பிரகடனப்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0

  • Aslam Tuesday, 26 January 2016 05:48 AM

    இஸ்லாமியர்கள் வாழும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இப்படியான ஒரு நிகழ்வு செய்யும் போது ஏன் பெண்களுக்கு பிரத்தியோகமா நடத்த முடியாதா? உங்கள் மனைவியர்களின் உடல் கட்டுமானத்தை வேறு ஒருவர் பார்க்கும் வகையில் உடற்பயிற் சி செய்வதற்கு இஸ்லாம் அனுமதித்திருக்கிறதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X