Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-யூ.எல். மப்றூக்
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பணியாற்றுகின்ற சில நபர்கள், மேலதிகாரிகளின் அனுமதியின்றி நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தனக்கு உத்தரவிட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாத் தெரிவித்தார்.
குறித்த விசாரசணை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பணித்துள்ளதாகவும் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கூறினார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பணியாற்றும் இருவர் பிரதேச சபைச் சட்டத்துக்கு முரணான வகையில் செயற்படுகின்றமை தொடர்பில் ஊடகங்களில் சில நாட்களுக்கு முன்னர் செய்தியொன்று வெளியாகியிருந்தது.
இதனையடுத்து, மேற்படி இரண்டு நபர்களும், அட்டாளைச்சேனை பிரதேச சபையிலுள்ள சிலரை துணைக்கு அழைத்துக் கொண்டு, வியாழக்கிழமை பிரதேச சபைக் கட்டிடத்துக்கு முன்பாக, சுலோகங்களைத் தூக்கிக்கிக் கொண்டு, ஊடகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
பிரதேச சபையில் கடமை புரிவோர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதாக அறியக் கிடைத்தது. ஆனால், இவ்வாறான நடவடிக்கையொன்றில் ஈடுபடுவதற்கான அனுமதி எவையும் எம்மிடம் பெறப்படவில்லை. மேலதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், பிரதேச சபையில் கடமையாற்றுவோர் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது.
எனவே, இவ்விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணையொன்றினை நடத்துமாறு, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எனக்கு உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, குறித்த விசாரணையின் அறிக்கையினையும் தனக்கு வழங்குமாறு அவர் கேட்டுள்ளார். இதற்கிணங்க, மேற்படி ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணையொன்றினை நான் நடத்தவுள்ளேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago