2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

ஆலையடிவேம்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரியாலயம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரியாலயம் அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்புப் பிரதேச செயலகத்தின் அருகிலேயே இப்புதிய காரியாலயம் அமைந்துள்ளது.

இதன்போது, காரியாலயம் திறந்துவைக்கப்பட்டு பெயர்ப்பலகையும் திரைநீக்கம் செய்யப்பட்டது. அத்துடன், காரியாலயத்துக்குத் தேவையான கட்சியின் வராலாறு அடங்கிய புத்தகங்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசனிடம் கையளிக்கப்பட்டது.

வருமானம் குறைந்த குடும்பங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் 5 பேருக்கு மடிக்கணினியும் வழங்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X