2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

ஆலயத்துக்கு எதிரே ஆலயம்: மக்கள் எதிர்ப்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 08 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று, நாகதம்பிரான் ஆலயத்துக்கு முன்னால் முறையற்ற விதத்தில் மக்களிடையே பிணக்குகளை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுவரும் பிறிதொரு ஆலய கட்டட நிர்மாணத்தை தடை செய்யுமாறு நாகதம்பிரான் ஆலய முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். 

ஆலய எல்லையை அண்மித்த பகுதியில் ஒரு சிலரின் விருப்புக்கமைய அமைக்கப்படும் இக்கட்டட பணியால் பிரதேசவாதம் தோன்றக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவ்விடத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயம் வழிபாட்டுக்கு போதுமானதாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

அத்தோடு, மாகாண சபை அமைச்சர் ஒருவரிடமிருந்து இதற்காக பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் இவ்வாறான ஆலய அமைப்பின் வேலையை ஆரம்பித்தபோது  இது போன்றதொரு எதிர்ப்பினால் கைவிடப்பட்டதாகவும் மீண்டும் இவ்வாறு அமைவதற்கு காரணம் யார், எனவும் மக்கள் கேள்வியேழுப்பினர். 

இது தொடர்பில் பொலிஸாரில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாகவும் ஆலய தலைவர் சி. சந்திரசேகரம் கூறினார்.

இது தொடர்பில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கூறுகையில், இவ்வாறானதொரு ஆலயத்தை தடை செய்யக்கோரி தனக்கு இதுவரையில் எழுத்து மூலமான அறிவித்தல் கிடைக்கவில்லை எனவும் அவ்விடத்துக்குரிய காணி உறுதிப்பத்திரத்தை அவர்கள் சமர்ப்பித்துள்ளதன் காரணத்தால் ஆலயம் அமைப்பதற்கு அனுமதி வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X