Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 07 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
ஆசிரியர் தொழிற் சங்கங்களின் எழுத்து மூலமான இணக்கப்பாடின்றி, கிழக்கு மாகாணத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களை இடைநிறுத்தியிருப்பதானது, ஆசிரியர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் எனக் குறிப்பிட்டுள்ள கிழக்கிலங்கை கல்வி, சமூக அபிவிருத்தி மன்றம், இவ்விடயத்தில் மாகாண ஆளுநர் தலையிட வேண்டுமெனவும் வலியுறுத்தயுள்ளது.
இது தொடர்பாக மாகாண ஆளுநருக்கு, தமது சங்கம் இன்று (07) அவசரக் கடிதம் அனுப்பி வைத்திருப்பதாக அதன் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கிழக்கு மாகாண பாடசாலைகளில் தமது சொந்த வதிவிடங்களை விட்டு மிக நீண்ட காலமாக கடமையாற்றும் ஆசிரியர்களை 2020ஆம் ஆண்டு முதல் இடமாற்றம் செய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அது நடைமுறைப்படுத்தப்பட வில்லை.
“இந்நிலையில், 2021ஆம் ஆண்டிலாவது இவ்விடமாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிரியர் சங்கங்கள் அங்கத்துவம் வகிக்கும் ஆசிரியர் இடமாற்ற சபையின் அங்கிகாரத்துடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான கடிதங்கள் தயாரிக்கப்பட்டு, தபாலிடுவதற்கு ஆயத்தமான நிலையில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரது தலையீட்டினால் குறித்த இடமாற்றம் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
குறித்த ஆசிரியர் இடமாற்றத்தை ஆளுநர் தலையிட்டு, உடனடியாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
32 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago