2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இந்திய பிரஜைகள் விடுதலை

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 04 இந்திய பிரஜைகளையும் இன்று (17) வியாழக்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. யூட்சன் விடுதலை செய்துள்ளார்.

சென்னையிலிருந்து கல்முனைக்கு ஒரு தொகை புடவைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வேளையில் நேற்று புதன்கிழமை காலை 06.00 மணியளவில் கல்முனை பொலிஸார் இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.

குறித்த நபர்களை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. யூட்சன் முன்னிலையில் இன்று (17) ஆஜர்செய்தபோது குறித்த நபர்கள் சகல ஆதாரங்களையும் காண்பித்ததையடுத்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட புடவைகளும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X