2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

இனியபாரதியின் ஆதரவாளர்களில் ஏனைய இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.புஸ்பகுமாரின் (இனியபாரதி) முன்னாள் வாகனச் சாரதி உட்பட ஆதரவாளர்கள் மூவரில்  ஏனைய இருவரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இச்சந்தேக நபர்கள் இருவரையும் அவர்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி இடம்பெறவுள்ள அடையாள அணிவகுப்புக்கு கொண்டுவருமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X