2025 மே 21, புதன்கிழமை

இயற்கை வளங்களை பாதுகாப்பது தார்மீக கடமையாகும்

Niroshini   / 2016 மார்ச் 31 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஒரு நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒரு மனிதனுடைய தார்மீக கடமையாகும் என அம்பாறை மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் உத்தியோகத்தர் எம்.எம்.றியாஸ் தெரிவித்தார்.

காணிகளை எவ்வாறு பயன்படுத்துவது சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை(29) அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக காணிப்பயன்பாட்டு திட்டமில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.எம்.சாஞ்ஜீர் தலைமையில், சின்னப்பாலமுனை பல்தேவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜன நெருக்கம் காரணமாக இன்று மக்கள் குடியேறுவதற்காக காடுகளையும் இயற்கை வளங்களையும் அழிப்பதால் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டு நாளந்தம் இயற்கை அணர்த்தங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

காலநிலை மாற்றத்தினால் உலகம் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதோடு மக்களும் பல இன்னல்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காகவும் தனி மனித வருமானத்தை அதிகாரிப்பதற்காகவும் இலங்கை அரசாங்கம் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

திவிநெகும திட்டத்தின் ஊடாக பயிர்ச்செய்கை மேற்கொள்வதன் மூலம் எமது சூழலை பாதுகாப்பதோடு சுகதேகியாகவும் வாழலாம்.

எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி நாம் ஒவ்வொருவரும் சூழலை பாதுகாக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச். தம்ஜீது, கிராமசேவக உத்தியோகத்தர் எம்.பர்வின் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .