2025 ஜூலை 16, புதன்கிழமை

இயல்பு நிலை திரும்பியது

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த ஒருவார காலமாக அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் இயல்பு நிலை மீண்டும் திரும்பியுள்ளது.

மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக வடிந்து வருவதோடு தடைப்பட்டிருந்த உள்ளூர் போக்குவரத்துக்களும் வழமைக்கு திரும்பியுள்ளன.

மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 239 ஹெக்டயர் நெல்வயல்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 68 ஆயிரத்து 300 ஹெக்டயர் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 1414 ஹெக்டயர் நெல் வயல்கள் 25 சதவீதம் பாதிப்படைந்துள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை,1,046 ஹெக்டயர் நெல் வயல்கள் 50 சதவீதமான பாதிப்புகளையும் 1,602 ஹெக்டயர் நெற் காணிகள் 75 சதவீதமான பாதிப்புகளையும் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, நாமல் ஓயா, தமண, உஹன, சம்மாந்துறை, நிந்தவூர் மற்றும் தம்பிலுவில் ஆகிய கமநல சேவைக்குட்பட்ட பிரதேசங்களிலேயே மேற்படி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X