2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இரு தனிநபர் பிரேரணைகளை முன்வைக்க சம்சுதீன் முஸ்தீபு

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துதல் மற்றும் சாய்ந்தமருது வோலிவொரியன் சுனாமி வீட்டுத் திட்டத்தை புனரமைப்பு செய்தல் உள்ளிட்ட இருவேறு தனிநபர் பிரேரனைகளை எதிர்வரும் 26ஆம் திகதியன்று, கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'சாந்தமருது, நிந்தவூர் மற்றும் புல்மோட்டை ஆகிய வைத்தியசாலைகளை ஆதார வைத்தியசாலைகளாக தரமுயர்துவது தொடர்பில், கடந்த 2012ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபையில், அப்போது சுகாதார அமைச்சராகவிருந்த எம்.எஸ்.சுபைரினால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரனை சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. பின்னர் நிந்தவூர் மற்றும் புல்மோட்டை வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில், சாய்ந்தமருது வைத்தியசாலை தரமுயர்த்தப்படாது பாரபட்சமான முறையில் கைவிடப்பட்டது' என்றார்.

'இதேவேளை 2004ஆம் ஆண்டின், சுனாமி கடற்பேரலை காரணமாக, சாய்ந்தமருது மக்களுக்கு வோலிவோரியன் கிராமத்தில் வீடுகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த வீடுகளுக்கு அஸ்பெஸ்டெஸ் சீட்டினால் கூரை இடப்பட்டுள்ளது. இதனால் குறித்த வீடுகளில் வசிக்கும் மக்கள் உஷ்ணமான காலநிலையின் போது மிகவும் அவதியுற்று வருகின்றனர்.

இதனால், சிறுவர்க்ள் மற்றும் வயோதிபர்கள், நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வீடுகளின் கூரைகளைத் திருத்தம் செய்து வழங்கவதற்கு கிழக்கு மாகாணசபை, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை  உள்ளிட்ட இரு வேறு தனிநபர் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளதாக' அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X