Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 03 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேத்தில் செங்கல் விற்பனையில் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இரு வியாபாரிகளை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த இந்தச் செங்கல் வியாபாரிகள், அக்கரைப்பற்றுப் பிரதேசத்துக்கு விற்பனைக்காக கொண்டுவந்த செங்கற்களின் எண்ணிக்கையில் மோசடி செய்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக மக்கள், பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸாரால் குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .