2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இரண்டு தேநீர் கடைகளை மூட உத்தரவு

Suganthini Ratnam   / 2016 மே 06 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, சம்மாந்துறைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுகாதாரத்;துக்கு கேடு விளைவிக்கும் வகையில் பழுதடைந்த உணவுகள் மற்றும் பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு தேநீர்க் கடைகளை எதிர்வரும் 10ஆம் திகதிவரை மூடுமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற  நீதவான் எச்.எம்.முகம்மது பஸீல், நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பல தேநீர்க் கடைகள் மற்றும் பலசரக்குக் கடைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, இந்த இரு தேநீர்க் கடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.  

இந்தக் கடைகளிலிருந்து பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய், அழுகிய மரக்கறிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X