2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இரண்டு பிரதான ஹோட்டல்களை மூடுமாறு உத்தரவு

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள இரண்டு பிரதான ஹோட்டல்களை மறு அறிவித்தல் வரும் வரை மூடுமாறு உத்தரவிட்ட சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம், கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத பொருட்களை அழிக்குமாறும் உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம்.எம்.சபீரின்  ஆலோசனைக்கு அமைவாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஹோட்டல்கள், இறைச்சிக் கடைகள், மரக்கறி விற்பனை நிலையங்கள், பொதுச்சந்தை என்பவற்றை நேற்று (05) மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பீ.பேரம்பலம் தலைமையிலான  பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.

இப் பரிசோதனையின் போது இனங்காணப்பட்ட நான்கு ஹோட்டல்களுக்கும் மூன்று இறைச்சிக் கடைகளுக்கும் எதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது, பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள இரண்டு பிரதான ஹோட்டல்களை மறு அறிவித்தல் வரும் வரை மூடுமாறும் கைப்பற்றப்பட்ட பொருட்களை அழித்துவிடுமாறும் அதிகாரிகளுக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X