Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 10 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
அம்பாறை, பள்ளிக்குடியிருப்பு இரண்டாம் பிரிவில் ஜும்மா பள்ளி வீதியை அண்டி அமைந்துள்ள இரண்டு வீடுகளில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தங்கநகைகளும்; பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி வீதியை அண்டி அமைந்துள்ள வீடு ஒன்றில் எவரும் இல்லாத வேளையில் அவ்வீட்டு ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த கொள்ளையர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 03 இலட்சம் ரூபாய் பெறுமதியான 06 பவுண் நிறையுடைய 02 காப்புகள், ஒரு தங்கச்சங்கிலி, ஒரு நெக்கிலஸ், 02 மோதிரங்கள்; என்பவற்றுடன் 7,000 ரூபாய் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸில் அவ்வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறே அருகில் உள்ள வீட்டு ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த கொள்ளையர்கள்;, 16 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸில் அவ்வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், பள்ளிக்குடியிருப்பு முதலாம் பிரிவில் உள்ள 05 வீடுகளுக்கு சென்ற கொள்ளையர்கள், அவ்வீடுகளின் ஜன்னல்களை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது வீட்டுக்காரர்கள் உறக்கத்திலிருந்து விழித்ததன் காரணமாக தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .